அருவா வெட்டு, கையில் விலங்குடன் ஆர்யா.. இணையத்தை மிரட்டும் எனிமி பட பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக பழகி வருபவர்கள் ஆர்யா மற்றும் விஷால். இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்து தனது நட்பை திரையுலகத்திற்கு வெளிபடுத்தினர்.

அவன் இவன் படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு ரசிகர்கள் அனைவரும் மீண்டும் எப்போது இணையப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில் எனிமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் கூட ஆர்யாவிற்கு ஜோடியாக எனிமி படத்தில் மலையாள நடிகையான மோகன்தாஸ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஆர்யாவின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

arya enemy
arya enemy

அதில் ஆர்யா முகத்தில் அருவா வெட்டு காயங்களுடன், கையில் விலங்கு காப்பு போடப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஆர்யா சண்டை காட்சியில் மிரள வைத்து இருப்பார் என தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்