சினிமா பாணியில் திருமணம் செய்த அருவி பட இயக்குநர்.. சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

அருவி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் பிரபு புருஷோத்தமன். இவர் பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஹீரோயின்கள் பலரும் நடிக்க தயங்கும் இந்த கதையில் துணிச்சலாக நடித்த அதிதி பாலனுக்கு ஏராளமான விருதுகள் குவிந்தது.

இப்படி ஒரு புதுமையான கதையை இயக்கிய அருண் பிரபு சினிமாவில் முக்கிய இயக்குனராக கவனம் பெற்றார். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தில் பிரதீப் ஆண்டனி, டிஜே பானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த திரைப்படம் ஓடிடி யில் வெளியானது. அவரின் அருவி திரைப்படம் போன்றே இந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது.

அதன்பிறகு எந்த திரைப்படமும் இயக்காத அருண் பிரபு தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அவருக்கு டீனா என்பவரோடு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணம் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.

arunprabhu
arunprabhu

அருண் பிரபு தன் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்து தான் பலருக்கும் இவருக்கு திருமணம் நடந்த விஷயம் தெரிய வந்துள்ளது. தற்போது சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்ட இயக்குநருக்கு ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்