முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப்.. மிரட்டும் அருண் விஜய்யின் பார்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அருண் விஜய் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் வந்த விக்டர் கதாபாத்திரத்திற்கு பிறகு அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறிக்கொண்டிருக்கிறது. வில்லனாக ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாகவும் தன்னுடைய இழந்த மார்க்கெட்டை மீட்டுள்ளார்.

வாரிசு நடிகராக இருந்தாலும் இவருக்கு சும்மா ஒன்றும் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இவரும் பல்வேறு அவமானங்களை சந்தித்துதான் தனக்கென ஒரு பாதையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்.

அந்த பாதையை எக்காரணத்தைக் கொண்டும் நழுவ விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். தற்போது அருண் விஜய் எப்படி படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அந்தவகையில் அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அறிவழகன் வெற்றிக் கூட்டணியில் பார்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஹோட்டலயே ஸ்கிரீன் ஆக வைத்து வெட்டவெளியில் அந்த ஹோட்டல் முன்பக்க அமைப்பையே ஒரு தியேட்டர் போல் மாற்றி அதில் போஸ்டரை வெளியிட்டனர். இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் இன்று பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் காட்சி அமைப்புகளை பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு தரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

arunvijay-border-firstlook-poster
arunvijay-borrder-firstlook-poster
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்