கொட்டுற மழையில் கொலைவெறியுடன் இருக்கும் அருண் விஜய்.. இணையத்தை கலக்கும் சினம் டீசர்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய இடத்தை பிடித்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் அருண் விஜய். வாரிசு நடிகராக இருந்தாலும் அவர் சினிமாவில் தட்டுத்தடுமாறி முன்னுக்கு வர பல வருடங்கள் ஆகி உள்ளது.

அஜித் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவரை தமிழ்நாடு ரசிகர்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

இடையில் அவ்வப்போது மகிழ்திருமேனி கூட்டணியில் அருண்விஜய் தடையறத்தாக்க, தடம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஹீரோவாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தற்போது ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் நடிக்கும் அனைத்து படங்களும் நல்ல வசூலை பெற்று கொடுக்கிறது. அந்தவகையில் அடுத்ததாக டி என் ஆர் குமரவேலன் இயக்கத்தில் சினமெனும் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கட்டுமஸ்தான உடலில் அருண் விஜய் போலீஸ் உடை அணிந்தால் கம்பீரம் தான்.

சினம் படத்தின் டீசர் தற்போது இணையதளங்களில் வெளியாகி செம வைரல் ஆகியுள்ளது. கொட்டுற மழையில் கொலைவெறியுடன் இருக்கும் அருண் விஜய்யின் ஓப்பனிங் பஞ்ச் டயலாக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டீசரை பார்க்கையில் அப்பா மகள் பாச போராட்டம் ஆக இந்த படம் உருவாகி இருக்க அதிக வாய்ப்பு இருப்பது போல் தான் தெரிகிறது. ஆல் த பெஸ்ட் அருண் விஜய் சார்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்