7 வருடம் கழித்து ரிலீஸுக்குத் தயாராகும் அருண் விஜய் படம்.. டிரெய்லரே செம ஹிட் ஆச்சு, இப்போ படம் ஹிட் ஆகுமா?

என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய்(Arun Vijay) ஹீரோவாகவும் பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். வில்லனாக ரீஎன்ட்ரி ஆகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் வா டீல்.

அருண் விஜய் நடிப்பில் சிவஞானம் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு உருவான திரைப்படம். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபல நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஃபெதர் டச் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அதே சமயத்தில் ஜேஎஸ்கே நிறுவனமும் இதன் பங்குதாரர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜேஎஸ்கே நிறுவனம் அருண் விஜய்யின் வா டீல் படத்தை OTTயில் ரிலீஸ் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அருண் விஜய் பெரிதும் நம்பியிருந்த இந்த படம் இணையதளத்தில் நேரடியாக வெளியாவதால் பெரிதும் கவலையில் இருக்கிறாராம். இருந்தாலும் இந்த சமயத்தில் எந்த ஒரு படமும் தியேட்டரில் வெளிவராத நிலையில் OTTயில் வெளிவருவதும் ஒருவகையில் நல்லதுதான் எனவும் நினைக்கிறாராம்.

தற்போது தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் அருண் விஜய்யின் வெற்றி பட வரிசையில் வா டீல் படம் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

vaa-deal-cinemapettai
vaa-deal-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்