வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

யானை ரிலீஸ் ஆகியும் சோகத்தில் இருக்கும் அருண் விஜய்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு யானை திரைப்படம் வெளிவந்தது. எப்போதோ வெளிவர வேண்டிய இந்த திரைப்படம் பல தடங்கல்களுக்கு பிறகு வெளியானாலும் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

குடும்ப செண்டிமெண்ட், காதல் என்று வழக்கமான ஹரியின் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல நாள் காத்திருப்பின் பலனாக அவருக்கு யானை திரைப்படம் ஒரு திருப்புமுனையை கொடுத்துள்ளது.

சொல்லப்போனால் அருண் விஜய் இப்படி ஒரு தருணத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அவரின் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் தயாராகி ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அந்த வகையில் அருண் விஜய் யானை திரைப்படம் வெளிவந்த பிறகு தன்னுடைய மார்க்கெட் ஏறிவிடும் என்று முழுதாக நம்பி இருந்தார்.

அதனால் தான் யானை திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் தன்னுடைய சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தினார். இப்படி யானை திரைப்படம் வரவேற்பை பெற்று வந்தாலும் அருண் விஜய் மட்டும் இன்னும் சோகத்திலேயே இருக்கிறாராம்.

ஏனென்றால் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் பார்டர், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று நம்பி இருந்தார். அதற்காக அவர் சில பல திட்டங்களையும் போட்டு வைத்திருந்தார். ஆனால் தற்போது அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் வெளியாக முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.

இதுதான் தற்போது அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆக முடியாமல் ஏதாவது ஒரு தடங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் யானை திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும் அருண் விஜய் மட்டும் அதை கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கிறார்.

- Advertisement -

Trending News