சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இயக்குனர் பாலாவால் நொந்து போன அருண் விஜய்.. படாதபாடு பட்டு வரும் பரிதாபம்

பொதுவாகவே இயக்குனர்கள் என்றால் படப்பிடிப்பின் நேரத்தில் கடுகடு என்று கோபத்துடன் தான் இருப்பார்கள். அதிலும் இயக்குனர் பாலாவை பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாருக்கும் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும். அவர் எதிர்பார்த்தபடி நடிக்க வில்லை என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போயி அவர்களை டார்ச்சர் செய்தாவது அவருக்கு தேவையான நடிப்பை வாங்கிக் கொள்வார்.

ஆனால் இந்த கேரக்டர் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுக்கு செட்டாகாமல் இருப்பதால் இவருடைய கதைக்கு யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லை. அதனால் தற்போது அருண் விஜய் இவரிடம் மாட்டிக் கொண்டார். பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு வெளியூரில் ஆரம்பித்து வெற்றிகரமாக 30 நாட்கள் முடிந்து விட்டது.

Also read: தோற்காத ஆயுதங்களை தன்னுடைய பட்டறையிலிருந்து வடித்துக் கொடுப்பேன்.. வணங்கானில் இணைந்த பிரபலம்

எந்த பிரச்சினையும் இல்லாமல் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அருண் விஜய் கேரக்டர் எப்பொழுதுமே கலகலப்பாக பேசக்கூடியவர். அத்துடன் அனைவரிடம் பேசிக் கொண்டே இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் இந்த படபிடிப்பில் இவருடைய ஒரிஜினலிட்டியை மறந்து வேறு மாதிரி இருந்து வந்திருக்கிறார்.

மேலும் படப்பிடிப்பின் போது அருண் விஜய் வேறு யாரிடமும் பேசவில்லையாம் முக்கியமாக இயக்குனரிடமும் எந்தவித பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் பாலா எப்பொழுதுமே கோபமாக இருக்கிறாராம். அப்படியே இவர் போய் பேசினால் கூட ஒழுங்காக பதில் சொல்லாமல் இருப்பாராம். இதனால் மனதளவில் பெரிதும் நொந்து போய் இருக்கிறார்.

Also read: வணங்கான் படப்பிடிப்பில் விழுந்த அடி உதை.. பாலாவை சுற்றி வரும் அடுத்த ஏழரை

பின்னர் அருண் விஜய் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை தனிமையில் இருக்கிற மாதிரியே பீல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். அத்துடன் இவரிடம் தெரியாமல் மாட்டிக் கொண்டு இந்த அளவுக்கு படாதபாடு பட்டு வருகிறோம் என்று நினைக்கிறார். எப்படியோ இந்த படத்தை நல்லபடியாக நடித்து முடித்துவிட்டு போனால் சரி என்று கமுக்கமாக இருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி அருண் விஜய்க்கு ஒரு பெரிய நிம்மதி என்றால் பாலா படம் என்றால் அது சக்சஸ் ஆக தான் அமையும். அதனால் தன்னுடைய கேரியர் பெரிய அளவில் உச்சத்தில் வளரும் என்று நம்பிக்கையுடன் பாலாவுடன் போராடி வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நம்பிக்கைப்படி இந்த படம் வெற்றி அடைந்தால் இவர் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு தீர்வாக இருக்கும்.

Also read: சூர்யாவின் 2 ஆஸ்தான இயக்குனர்களை தட்டி தூக்கிய அருண் விஜய்.. இது பழிக்கு பழியா இல்ல பாவமா.?

- Advertisement -

Trending News