இரு மடங்கு சக்தியுடன் தயாரான அருண் விஜய்.. டைட்டிலுடன் வெளியான AV 36 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Arun Vijay: அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை அடுத்து அவருடைய 36 ஆவது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

AV 36 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

arun vijay-retta thala
arun vijay-retta thala

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மான் கராத்தே புகழ் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார். இப்படி மெகா கூட்டணியாக இணைந்துள்ள படத்தின் பெயர் ரெட்ட தல என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் அருண் விஜய் இரண்டு கெட்டப்புகளில் இருக்கிறார். ஒருவருக்கொருவர் மல்யுத்தம் செய்வது போல் வெளியான இந்த போஸ்டரே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இதை அவருடைய ரசிகர்கள் ஃபயர் வீட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்போதே படம் தாறுமாறு ஹிட் என அலப்பறை கொடுக்கவும் ஆரம்பித்து விட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்