சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பயங்கர டெரராக நடிக்கப் போகும் அருள்நிதி.. பீதியை கிளப்பிய டைட்டில்

அருள்நிதி சில வருடங்களாகவே ஹாரர் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த டிமாண்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் டி ப்ளாக் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதை அடுத்தும் அவர் இரண்டு மூன்று ஹாரர் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது டைரி, தேஜாவு, டிமான்டி காலனி 2 ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்தது என்பதால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அருள்நிதி சமீப காலமாக முறுக்கு மீசையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதற்காக இப்படி ஒரு கெட்டப் என்று பலருக்கும் இதுவரை புரியாத புதிராகவே இருந்து வந்தது. இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது அருள்நிதி தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

கழுவேத்தி மூக்கன் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தில் தான் அருள்நிதி நடிக்க இருக்கிறார். படத்தின் டைட்டிலே இவ்வளவு கொடூரமாக இருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கழுவேத்தி என்றால் பழங்காலத்தில் கொடுக்கப்படும் ஒரு கொடூரமான தண்டனையாகும்.

ஊசி போன்ற கூர்மையான முனை கொண்ட ஒரு ஆயுதத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை அப்படியே உட்கார வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுப்பதுதான் கழுவேற்றுதல் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு கொடூரமான தண்டனையை அந்த காலத்தில் அரசர்கள் மிகப்பெரிய குற்றங்களை செய்தவர்களுக்கு கொடுப்பார்களாம்.

இதை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டிலே பயங்கர பீதியை கிளப்புகிறது. அப்படி என்றால் படத்தில் இது போன்ற பல தண்டனைகளும், காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அருள்நிதி இந்த படத்தில் மிகவும் டெரராக நடிக்க இருக்கிறார். இதன் மூலம் படத்தில் அவருடைய நடிப்பை மற்றொரு பரிமாணத்தில் நம்மால் பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News