அதிரடி, காதல் என வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன்.. படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண் யார்?

அருள்நிதி பெரிய பிரம்மாண்ட படங்களை கொடுக்காமல் தற்போது வரை மிக எளிமையான படங்களில் நடித்து வருகிறார். அதிலும் முக்கியமாக திரில்லர் சப்ஜெக்ட் என்றால் உடனே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விடுவார். இவர் கதையை தேர்ந்தெடுக்கும் முறை எளிமையாக இருந்தாலும் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் இவர் படத்திற்கு தேடி செல்வார்கள்.

அப்படி இல்லாமல் புதுவிதமாக ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து கிராமத்து இளைஞனாக நடித்த படம் கழுவேத்தி மூர்க்கன். படம் வெளியாகி பல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் நல்ல விமர்சனமாகவே இருந்தும் வருகின்றன. இருந்தாலும் மக்கள் இதனை ஏன் பார்க்க வேண்டும் என்று நீங்களே இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read : உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.. செய்வதறியாமல் இருக்கும் ரெட் ஜெயண்ட்

அருள் நிதியின் நடிப்பு, ஒவ்வொரு படங்களிலும் கதையை வித்தியாசமாக தேர்ந்தெடுத்தவர், தற்பொழுது தன்னையே தன் உருவத்தை கொஞ்சம் மாற்றி மூர்க்கத்தனமாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். படத்தின் முக்கிய பலம் கதையில் இல்லை, அருள் நிதி நடிப்பு மட்டுமே அந்த அளவுக்கு மிரட்டி இருக்கிறார். இவர் வரும் ஒவ்வொரு காட்சிகளுமே ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.

இது மாதிரி படங்களில் சாதாரணமாக ஒரு ஹீரோயினை கடமைக்காக பயன்படுத்துவார்கள் ஆனால் இந்த படத்தில் ஹீரோயின் துஷ்ரா விஜயன் தன் பங்கை அருள்நிதிக்கு நிகராக அசத்தி இருக்கிறார். பெரிய ஹீரோன்களை பார்த்தாலே நமக்கு பிடிக்கும் அந்த அளவிற்கு இவரை பார்த்தாலும் பிடிக்கும் அளவிற்கு நடித்து மிரட்டி இருக்கிறார். இவருடன் அருள்நிதி சேர்ந்து வரும் காதல் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷை பின்னுக்கு தள்ளிய அருள்நிதி.. மூர்க்கன், தீராக் காதல் வேட்டையாடிய முதல் நாள் கலெக்ஷன்

இயக்குனர் இந்த படத்தில் பழைய கதையை உருட்டி மக்கள் அனைத்து காட்சிகளை யூகிக்கும் விதத்தில் இருந்தாலும். இரண்டரை மணி நேரத்திற்கு மேல் படத்தை உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு காட்சிகளை அமைத்துள்ளார். படத்தில் அனைத்து நடிகர்களின் நடிப்பு எதார்த்தமாக அமைந்தது சிறப்புக்குரியது. பல நூறு வருடம் பார்த்த சலித்த கதையை எந்த கேள்வியும் கேட்க விடாத அளவிற்கு படத்தை அமைத்து வெற்றி பெற்றுள்ளார்.

அருள்நிதி கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் அவரது சினிமா வாழ்க்கையில் சின்ன திருப்பம் ஆவது நிகழும் என்பது உண்மை. படம் பிடிக்கவில்லை என்றாலுமே அருள் நிதியை பிடித்து விடும். அதேபோல் கதாநாயகிக்கும் இந்த படத்தில் மூலம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகமாக வரும் வாய்ப்பு. இவர்களை இந்த அளவிற்கு பயன்படுத்திய இயக்குனருக்கு மட்டும் வாய்ப்பு வராமல் இருக்கும் மொத்தத்தில் இந்த படம் பழைய படமாக இருந்தாலும் பார்க்கும் படமாக இருக்கிறது.

Also Read : மாமன்னன் படம் ஓட வாய்ப்பே இல்ல.. இப்பவே உதயநிதி, வடிவேலு தலையில் இடியை இறங்கிய பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்