வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை.. பாதிக்குபாதி அதே மாதிரி நடிக்கும் அருள்நிதி

வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அருள்நிதி. தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதன்பின்பு அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மேலும் தொடர் தோல்வி தந்த அருள்நிதிக்கு திருப்புமுனையாக மௌனகுரு படம் அமைந்தது.

தற்போது அருள்நிதி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.

அதுவும் அருள்நிதியின் டிமாண்டி காலனி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் தொடர்ந்து அருள்நிதி ஹாரர் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் ஹாரர் படங்கள் தான் அவருக்கு கைகொடுக்கிறது என்பதால் தொடர்ந்து இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதேபோல் அருள்நிதி நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டீ ப்ளாக் போன்ற படங்கள் ஹாரர் படங்களாகவே உள்ளது. ஏற்கனவே தயாரான இந்தப் படங்கள் கோவிட் தொற்றினால் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அருள்நிதி இதுவரை 15 படங்கள் நடித்துள்ளார்.

அதில் பாதிக்கு பாதி ஹாரர் படங்கள் தான். மேலும் அருள்நிதி தன்னுடைய அடுத்தடுத்த படங்களும் ஹாரர் கதையில் தான் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருள்நிதி முதன்முதலாக நடித்த வம்சம் படத்தில் காமெடி, காதல், ஆக்சன் என பட்டையைக் கிளப்பி இருந்தார்.

ஆனால் தற்போது தொடர்ந்து ஹாரர் படங்களில் அருள்நிதிக்கு வெற்றி தந்து வருவதால் இதே ஜானரில் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை பயமுறுத்த காத்திருக்கிறது.

- Advertisement -

Trending News