கொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் தமிழ் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அருள்நிதி. அருள்நிதி நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும்.

அந்த வகையில் சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படம் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக டைரி என்ற த்ரில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருள்நிதி.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே ஒரு விதமான எதிர்பார்ப்பும் இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. போஸ்டரே பல்லாயிரம் கதைகளை கூறுகிறது.

தற்போது டைரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அருள்நிதி யூடியூப் எருமசாணி புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு கல்லூரி படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப்படமும் காமெடி கலந்த த்ரில்லர் என கூறுகின்றனர். இப்படி படத்திற்கு படம் தன் நடிப்பை வழங்கி வருகிறார் அருள்நிதி. அதுமட்டுமில்லாமல் திரில்லர் படங்களுக்கு அருள்நிதி தான் சரியான தேர்வு என பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துவிடுகின்றனர்.

அந்த அளவுக்கு திரில்லர் படங்களில் தன்னுடைய நடிப்பால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை ரசிகர்களுக்கும் புகுத்துவதில் அருள்நிதி கில்லாடிதான். இன்னிசை பாண்டியன் இயக்க பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் டைரி படத்தை தயாரித்துள்ளார்.

diary-firstlook-poster
diary-firstlook-poster
- Advertisement -