நோய் தாக்கியது போல் எலும்பும் தோலுமாய் ஆளே மாறிய ஷாலினி பாண்டே.. தீயாய் பரவும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஷாலினி பாண்டே. மேலும் தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய பட்டாலும், ஷாலினி பாண்டே அளவிற்கு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நிற்கவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து.

ஏனென்றால் அந்த அளவிற்கு அர்ஜுன் ரெட்டி படத்தில் பல ரசிகர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை அடித்தார் ஷாலினி பாண்டே. மேலும் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் முக தோற்றம், கொழுக் மொழுக் என்ற உடல் தோற்றம் என பல வசீகரங்களை தன்னுள் வைத்துக் கொண்டிருந்ததால் ஷாலினி, கோலிவுட்டிலும் மின்ன தொடங்கியதோடு, பல ரசிகர்களையும் தனக்காக பெற்றிருந்தார்.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர்-திலகம்’, ஜிவி பிரகாஷ் உடன் ‘100% காதல்’ போன்ற படங்களில் ஷாலினி பாண்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் ஷாலினி பாண்டே ஜீவாவுடன் நடித்த ‘கொரில்லா’ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார்.

என்னதான் அம்மணி தெலுங்கு, தமிழ், தற்போது ஹிந்தி என மாறி மாறி நடித்தாலும், தற்போது வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில்  உடல் எடையை குறைத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள்  இணையத்தில் தீ போல் பரவி வருகின்றன.

shalini-pandey
shalini-pandey

அதாவது பப்ளி ஆன லுக்கில் பல இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட ஷாலினி பாண்டே, தற்போது உடல் எடையை பெருமளவு குறைத்து உள்ளாராம். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பாண்டே பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவுவதோடு  ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையும், ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.