கோடிகளில் நூல் விட்ட அரவிந்த்சாமி.. இந்த பட்டம் பறக்கவே வேணாம் என ஓடிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்த அரவிந்த்சாமிக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து வாய்ப்பு குறைய அதன் பிறகு தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இயக்குனர்கள் சும்மா இருப்பார்களா வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதைவிட போனவருக்கு கூப்பிட்டு வாய்ப்பு கொடுப்பதுதான் வழக்கமான ஒன்று.

அப்படி சினிமாவை விட்டு விலகியிருந்த அரவிந்த் சாமியை இயக்குனர் மோகன் ராஜா அழைத்துவந்து தனி ஒருவன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகு அரவிந்த் சாமிக்கு ஒரே குஷிதான் அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.

சமீபத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இருப்பினும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அரவிந்த்சாமி நடிப்பை பலரும் பாராட்டினர். அதன் பிறகு அரவிந்த் சாமிக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

aravind swamy
aravind swamy

ஆனால் அரவிந்த்சாமி தற்போது எத்தனை பட வாய்ப்புகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்பதை வைத்துதான் கால்ஷீட் கொடுப்பேன் என கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அரவிந்த்சாமி தற்போது 10 கோடிக்கு மேல் கேட்டு வருவதாக கூறிவருகின்றனர்.

இதனைக் கேட்ட இளம் இயக்குனர்கள், ஒரு படத்தில் முழுநேர கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கே 10 கோடி சம்பளம் கிடைப்பதில்லை. நீங்கள் நடித்தது ஒரு சில படங்கள்தான் அதுவும் பாக்ஸ் ஆபிஸில் எந்தப்படமும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை. அப்படி இருக்கும் போது நீங்கள் கேட்கும் 10 கோடி சம்பளத்தை எப்படி கொடுப்பார்கள் என கூறியுள்ளனர். அதெல்லாம் எனக்கு தெரியாது 10 கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன் என அரவிந்த்சாமி திட்டவட்டமாக கூறி இயக்குனர்களை வழி அனுப்பி வைப்பதாக கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்