சுந்தர் சி ஐயா, இது அரண்மனையா? இல்ல மணிக்கூண்டா? குழப்பத்தில் வந்த அரண்மனை3 பட அறிவிப்பு

சுந்தர் சி இயக்கிய அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2 என்ற படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அரண்மனை3 என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பகுதிகளை போல ஹாரர் காமெடியை மையமாக வைத்து அரண்மனை படங்கள் உருவாகி வருகின்றன. காஞ்சனா படங்களைப் போலவே அரண்மனை படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது சுந்தர்சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் அரண்மனை 3. அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் ஜனங்களின் கலைஞன் விவேக் அரண்மனை 3 திரைப்படத்தில் முக்கிய காமெடியனாக நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து யோகி பாபுவும் அரண்மனை 3 படத்தில் விவேக் உடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நாளை அரண்மனை 3 பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக போகிறது என்ற அறிவிப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். வழக்கமாக அரண்மனை படம் என்றால் மிகப்பெரிய அரண்மனை இருக்கும். அது பொதுவான விஷயம்தான்.

ஆனால் அந்த அரண்மனைக்கு நடுவில் மணிக்கூண்டு உள்ளதை பார்க்கும் போது சென்னை சென்ட்ரல் போல் காட்சியளிப்பது படக்குழுவினர் மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்து விட்டார்கள் என்பது போல் உள்ளது. இன்னும் நாளை வெளியாக போகும் பஸ்ட் லுக் போஸ்டரில் என்னென்ன கூத்துகள் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

aranamanai3-pre-firstlook
aranamanai3-pre-firstlook
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்