தமிழக மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த ஏ ஆர் ரஹ்மான்.. பதிலுக்கு ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா.?

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மு க ஸ்டாலின் பெரிய அளவு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அவரது கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றது.

இதனால் வருகிற 7ஆம் தேதியன்று மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்கவுள்ள நிலையில் தற்போது மு க ஸ்டாலின் வெற்றிக்கு பல பிரபலங்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக திமுக எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் தொடர்ந்து தோல்வியிலேயே இருந்தது. ஆனால் சிலரது கொள்கைகள் மற்றும் கூட்டணி கட்சி கோளாறுகளால் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது.

stalin
stalin

தற்போது முக ஸ்டாலினுக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் வாழ்த்துக்களையும் தமிழக மக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது மு க ஸ்டாலின் சமூகவலைத்தள பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத சாதனை படைக்க வேண்டும் என்றும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இவரது வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில் முக ஸ்டாலின் ஆஸ்கார் நாயகனின் வாழ்த்துக்கு நன்றி எனவும், உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்