குடிகாரனால் இளையராஜா இசையில் இணைந்த 13 வயது சிறுவன்.. வேறலெவலில் உச்சம் தொட்டு சாதனை

கேட்பதற்கு இனிமையான பல பாடல்களை தன்னுடைய இசையால் நமக்கு கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இரவில் தூங்குவதற்கு முன்பு, நீண்ட தூரப் பயணத்தில் ரிலாக்சாக கேட்பதற்கு நாம் தேர்ந்தெடுப்பது அவரின் பாடல்களை தான்.

இவரின் இசையில் நம்மை கவர்ந்த ஏராளமான திரைப்படங்கள் உண்டு. இப்படி அவரின் இசையில் நம்மை மயக்கிய ஒரு திரைப்படம் மூடுபனி. இப்படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் ஷோபா, பிரதாப் இணைந்து நடித்த ஒரு த்ரில்லர் திரைப்படம்.

இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைக்கும் பொழுது அவருடைய டீமில் இருந்த ஒரு நபர் மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதை கவனித்த இளையராஜா அவரை திட்டி உடனே வெளியே போக சொல்லியுள்ளார்.

அதன் பிறகு அந்த வேலைக்கு என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், குழுவிலிருந்த ஒரு நபர் மலையாள படங்களுக்கு கீபோர்ட் வாசித்த திலீப் என்ற 13 வயது பையனை சந்திக்குமாறு இளையராஜாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு சம்மதித்த அவரும் அந்த பையனை வரவழைத்துள்ளார். மேலும் அவர் இசையமைக்க வேண்டிய குறிப்புகள் மற்றும் டியூன் குறித்த சில விஷயங்களை அந்த சிறுவனுக்கு கூறியுள்ளார். அதை கேட்ட அந்த சிறுவனும் வெற்றிகரமாக அதை முடித்துக் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு அந்தப் பையன் இளையராஜாவின் குழுவில் இணைந்து பல திரைப்படங்களுக்கு கீபோர்ட் வாசித்துள்ளார். அந்த சிறுவன் தான் இன்று நாம் இசைப்புயல் என்று கொண்டாடி வரும் ஏ ஆர் ரகுமான். இளையராஜாவுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு பணிபுரிந்த அவர் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழ் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசை அமைத்த அவர் இன்று ஒரு ஆஸ்கர் நாயகனாக கலக்கி வருகிறார். மலையாள சினிமாவில் 11 வயதில் தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பித்த அவர் இன்று இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்