ஏ.ஆர்.ரஹ்மான் எங்க அப்பாவின் கால் விரலுக்கு சமம்.. அவமானப்படுத்திய பிரபல நடிகர்!

தெலுங்கில் முன்னணி நடிகரும் மூத்த நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை 100க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது 61 வயதாகும் பாலகிருஷ்ணா இன்றும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாலகிருஷ்ணா அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தன் தந்தை தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் ஈடுபட்டுவரும் பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலம் ஹிந்துபூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவமதித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “ஏ.ஆர்.ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருப்பதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அவர் யார் என்றெ எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என் அப்பா என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம். இந்த விருதுகள் என் காலடிக்கு சமம்.

எந்தவொரு உயரிய விருதும் என் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு கொடுத்த பங்களிப்புக்கு ஈடாகாது. ஆகையால் இந்த விருதுகள் தான் வருத்தப்பட வேண்டுமே தவிர என் குடும்பமோ அல்லது என்னுடைய அப்பாவோ அல்ல” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக உள்ள பாலகிருஷ்ணா இவ்வாறு நாட்டின் உயரிய விருதுகளையும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கார் விருது என்ற ஏ.ஆர்.ரகுமானையும் அவமதித்து பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -