சார், செஞ்ச தப்ப நானே சரி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்க.. டாப் நடிகரிடம் கோரிக்கை வைக்கும் ஏ ஆர் முருகதாஸ்

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டிருந்த ஏ ஆர் முருகதாஸ் சமீபகாலமாக அதே முன்னணி நடிகர்களுக்கு தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

முருகதாஸிடம் சரக்கு நன்றாக இல்லை என்ற கருத்துக்கள் பெரும்பாலும் கோலிவுட் வட்டாரங்களில் பரவ ஆரம்பித்து விட்டதால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக அமைந்துவிட்டது.

எப்படியாவது விஜய்யுடன் கூட்டு சேர்ந்து இழந்த தன்னுடைய மார்க்கெட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற கனவில் மண்ணை அள்ளிப் போட்டார் தளபதி. முருகதாஸ் இயக்க வேண்டிய படத்தை தற்போது நெல்சன் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படமும் முருகதாஸின் சினிமா கேரியரை கேள்விக்குறியாக்கியது. இதனால் அடுத்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என இராப்பகலாக கதை எழுதி வருகிறாராம்.

அந்த வகையில் மீண்டும் ரஜினியுடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என விரும்பிய ஏ ஆர் முருகதாஸ், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து ரஜினியை சந்திக்க முயற்சி செய்து வருகிறாராம்.

மேலும் தர்பார் படத்தில் நடந்த குளறுபடிகள் இந்த படத்தில் இருக்காது எனவும் உத்தரவாதம் கொடுத்துள்ளாராம். ஆனால் ரஜினியோ ஒருமுறை பட்டது போதும் என நினைத்துக் கொண்டு பிறகு பார்க்கலாம், தொந்தரவு செய்யாதீங்க என்று அனுப்பி விட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன. இனிமேலும் முருகதாஸ் ரஜினி கூட்டணியில் படம் வர வாய்ப்பில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

rajini-ar-murugadoss-cinemapettai
rajini-ar-murugadoss-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்