வாய்ப்பு தராத விஜய்.. பழிவாங்க சிவகார்த்திகேயனை வேற லெவலில் உருவாக்கும் இயக்குனர்

AR Murugadoss is making the new look Sivakarthikeyan: அயலானின் வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இணைந்துள்ள திரைப்படம் எஸ் கே 23. கடந்த மாதம் பூஜையுடன் இனிதே ஆரம்பமானது இதன் படப்பிடிப்பு. சிவகார்த்திகேயனுடன் கன்னட நடிகை ருக்மணி வசந்த், மோகன்லால், வித்யூத் ஜம்பால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

ரமணா, கத்தி, சர்க்கார் போன்ற படங்களின் வாயிலாக வியாபாரத்தை மட்டுமே முதலாக கொள்ளாமல் சமூகத்திற்கு மாற்றத்தை உருவாக்கும் கருத்துக்களை விதைத்து மக்களின் உணர்வினை தட்டி எழுப்பும் முயற்சியை சிறப்பாக செய்து வரும் ஏ ஆர் முருகதாஸ், தர்பாரின் தோல்விக்கு பின் விஜய்யை இயக்கவிருந்த படமும் கைநழுவி போக 3 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் பக்கமே தலை காட்டாமல் இருந்தார்.

Also read: யானை படுத்தாலும் குதிரை மட்டம் தான் சீறும் ஏ ஆர் முருகதாஸ்.. 3 வருஷம் முடங்கினாலும் கெத்து காட்டும் இயக்குனர்

கம்பேக் கொடுக்க வந்திருக்கும் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி தமிழ் ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என பலரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

படம் பற்றி கேட்டதற்கு கஜினியை போல் ஆக்ஷனில் தெறிக்க விடுவதாக குறிப்பு கொடுத்தார் இயக்குனர். சிவகார்த்திகேயனுக்கு பலமே அவரது வாய்தான், கலக்கல் ஆன காமெடி மூலம் கவுண்டர் அடித்து சிறுசு முதல் பெருசு வரை சிரிக்க வைக்கும் சிவகார்த்திகேயனை சீரியசான முரட்டு பீசாக தரமேற்ற உள்ளாராம் முருகதாஸ். 

இதற்காக கூடவே ஒரு தனி பயிற்சியாளரை வைத்து பயிற்சி கொடுத்து டெஸ்ட் சூட் எடுத்து பாக்கும் போது இயக்குனர் நினைத்ததை விட உடல் மொழி, உச்சரிப்பு, தோற்றம் என அனைத்தும் பக்காவாக அமைந்துவிட மனுஷன் செம ஹேப்பியாம். அடுத்த விஜய் ரெடின்னு ஆனந்த பூரிப்படைந்து விட்டாராம் ஏ ஆர் முருகதாஸ். 

Also read: அமரன் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு.. சென்னையில் டூயட் ஆட தயாராகிய சிவகார்த்திகேயன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்