பெரிய நடிகர்கள் கைவிட்டதால் தனி ரூட்டை பிடித்த ஏ.ஆர்.முருகதாஸ்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த லேட்டஸ்ட் அப்டேட்

அஜித் நடிப்பில் வெளியான தீனா படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து இவர் இயக்கிய ரமணா, கஜினி, துப்பாக்கி, 7ஆம் அறிவு போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதன் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து தளபதி விஜயின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், ஒரு பெரிய பட்ஜெட்டில் அனிமேஷன் படத்தை உருவாக்கி வருவதாக தகவல் வந்தது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் எம்.சரவணன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சரவணனின் எங்கேயும் எப்போதும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் அனிமேஷன் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எம்.சரவணன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனரோ, தயாரிப்பாளரோ எதுவாக இருந்தாலும் முருகதாஸ் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும்.

ar-murugadoss-cinemapettai
ar-murugadoss-cinemapettai
- Advertisement -