ஏ ஆர் ரஹ்மான் மகனுடன் கைகோர்த்து மத ரீதியான பாடலை வெளியிட்ட யுவன்.. இதுல இப்படி ஒரு சங்கதி இருக்கா?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரஹ்மான். எப்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்களோ. அதே அளவிற்கு அவருடைய மகனான ஏ ஆர் ஆமீன்க்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது ஏ.ஆர்.அமீன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து முகமது நபியை  பற்றியும், முஸ்லிம் மதத்தினர் பற்றியும் பாடல்பாடியுள்ளனர். அதாவது முகமது நபி நகருக்கு உள்ளே வரும் போது அங்கு இருக்கும் மக்கள் அவரை வரவேற்க பாடிய பாடல்தான் இந்த பாடல் என கூறியுள்ளனர்.

தற்போது இருவர் குரலிலும் வெளியான இப்பாடல் தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. இப்பாடலுக்கு 3 மதத்தைச் சார்ந்தவர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ar ameen yuvan shankar raja
ar ameen yuvan shankar raja

ஆனால் ஒரு சிலர் நீங்கள் மதத்தை பற்றி பாடியது தவறில்லை. ஆனால் ஒரு மதத்தை மட்டும் பாடியுள்ளது சற்று மன வருத்தம் இருப்பதாக ஒரு சில ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் அனைத்து மதத்தையும் குறிப்பிடும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் ஏ.ஆர்.அமீன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரம்ஜான் நாளை கொண்டாடுவதற்காக இப்பாடலை பாடி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா  “Tala Al Badru Alayna” என்ற முஸ்லிம் பாடல் பாடியது எனக்கு மகிழ்ச்சி எனவும், அதைவிட ஏ.ஆர்.ஆமீன் சகோதரருடன் இணைந்தது  அதைவிட மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்