இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ராவை விட, இவரே தலைசிறந்த பவுலர்.. மறுபடியும் ஆரம்பிக்கும் பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களுக்கு, எப்போதுமே இந்திய வீரர்களை வம்பிழுத்த பார்ப்பது என்றால் ஒரு தனி சுகம். அந்த அணியின் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் எப்போதுமே இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டிப் பேசுவார்.

இப்பொழுது புதிதாக அகிப் ஜாவித் என்னும் பாஸ்ட் பவுலர் மீண்டும் இந்திய அணியை வம்புக்கு இழுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை பாகிஸ்தான் அணியின் பௌலறோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இந்திய அணியின் பும்ராவை விட அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஷாகின் அஃப்ரிடி. மேலும் அப்ரிடி கொண்டுள்ள பந்து வீசும் நுணுக்கங்களை ஒப்பீடு செய்யும் போது பும்ராவின் நுணுக்கங்கள் மிகவும் குறைவு தான். எனவே ஷாகீன் அப்ரிடியே சிறந்த பந்து வீச்சாளர் என்ற சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார்.

Aqib-Javid-Cinemapettai.jpg
Aqib-Javid-Cinemapettai.jpg

மேலும் அவர், பும்ரா ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மட்டும் தான். அவரால் புதிய பந்துகளில், நேர்த்தியான பந்துகளை வீச முடியாது. ஆனால் ஷாகின் அப்ரிடியோ, புதுப்பந்தில் கூட பல வேரியேஷன்கள் காட்டி விக்கெட் வீழ்த்தக்கூடியவர். கூடிய விரைவில் அவர் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறி விடுவார் என கூறியுள்ளார்.

Saheen-Afridi-Cinemapettai.jpg
Saheen-Afridi-Cinemapettai.jpg

இவர் கூறியதை கேட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு, எப்பொழுதுமே இந்திய அணி வீரர்களை குறைத்து மதிப்பிடுவது வழக்கமான ஒன்று தான், என்று நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.