இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் 10 படங்கள்.. லால் சலாம், பிரேமலு தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

premalu-ott-release
premalu-ott-release

This Week OTT Release Movies : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் எக்கச்சக்க படம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் இரண்டாவது வாரம் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கும் அதிகமாக வெளியாகிறது.

அந்த வகையில் தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த லால் சலாம் படம் வெளியாகிறது. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வருகின்ற 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் படம் ஹாட் ஸ்டாரில் ஏப்ரல் 11 வெளியாகிறது. அடுத்ததாக மலையாளத்தில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி பிரேமலு படம் வெளியாகி மாபெரும் பெற்றது.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் பிரேமலு

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரேமலு படம் ஏப்ரல் 12ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. அடுத்ததாக வசந்த ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான பெண் ஒன்று கண்டேன் என்ற படம் ஏப்ரல் 14ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

அமர் சிங் சம்கிலாவின் உண்மையை கதையைக் கொண்டு உருவாகியுள்ள அமர் சிங் சம்கிலா படம் நெட்பிளிக்ஸில் ஏப்ரல் 12 வெளியாகிறது. மேலு‌ம் காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள காஜல் கார்த்திகா படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அதோடு ஹாலிவுட், பாலிவுட் என மற்ற மொழிகளிலும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஆகையால் இந்த ரம்ஜான் விடுமுறையிலே ரசிகர்கள் ஓடிடியில் படம் பார்த்து கண்டு மகிழலாம்.

Advertisement Amazon Prime Banner