இந்த வாரம் ஓடிடியில் பட்டையை கிளப்ப வரும் 15 படங்கள்.. கோடிகளை அள்ளிய தில்லு ஸ்கொயர் எதில் தெரியுமா?

April 26 OTT Release Movies : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் இயக்கசக்க படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி ஓடிடியில் கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தெலுங்கில் காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவான தில்லு ஸ்கொயர் படத்தில் சித்து ஜொன்னலா கட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மிக நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றதால் ட்ரெய்லர் வெளியீட்டின் போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆனாலும் படம் கோடிகளை அள்ளிய நிலையில் இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அடுத்ததாக தெலுங்கில் விஜய்தேவர் கொண்டா நடிப்பில் உருவான தி ஃபேமிலி ஸ்டார் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. அடுத்ததாக தெலுங்கில் பீமா படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பிக் பாஸ் பிரபலம் சிபியின் இடி மின்னல் காதல்

அமேசான் பிரைமில் கன்னட மொழியில் வெளியான யுவா படம் வெளியாகிறது. தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் வெப்பம் குளிர் மலை என்ற படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் அதே ஓடிடி தளத்தில் பிக் பாஸ் பிரபலம் சிபிச்சந்திரன் நடிப்பில் இடி மின்னல் காதல் என்ற படம் வெளியாகிறது.

மேலும் இந்த வாரம் கொரியன் வெப் சீரிஸாக நெட்பிளிக்ஸில் குட் பாய் எர்த் படம் வெளியாகிறது. மேலும் ஆங்கிலத்தில் குங்ஃபூ பாண்டா 4 படம் பிஎம்எஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் டெட்பாடி டிடெக்டிவ்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளிவர உள்ளது.

மேலும் தி பான் ஜோவி ஸ்டோரி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த வாரம் எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் வர உள்ளதால் ரசிகர்கள் விடுமுறையை இந்த படங்கள் மூலம் செலவிடலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்