திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இவங்கள தவிர இந்த 6 வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது.. போலீசாக இருந்து மங்காத்தா ஆடிய அஜீத்

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லன் கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் சினிமா துறையில் வில்லன் என்றால் இவர்கள்தான் என்று பெயர் பெற்றவர்களும் உண்டு. அப்படியாக இவர்கள் நடித்த படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் வேறு எந்த ஒரு நடிகராலும், அந்த அளவிற்கு கனகச்சிதமாக நடிக்க முடியாது என நிரூபித்த 6 ஹீரோக்களை இங்கு காணலாம்

சத்யராஜ்: மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் அமைதிப்படை. இப்படத்தில் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் விதத்தில், சத்யராஜ் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் அரசியலை கற்றுத்தந்த மணிவண்ணனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கெத்தாக நடித்திருப்பார்.

Also Read: கேரக்டர் ரோலிலும் கலக்கிய சத்யராஜின் 5 படங்கள்.. கோமணத்தோடு அந்தர் பண்ணிய ஒன்பது ரூபாய் நோட்டு

ரகுவரன்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புரியாத புதிர். இதில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ரகுவரன் மனைவியை சந்தேகப்படும் கொடூர வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் ரகுவரன் பேசிய வசனங்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

அஜித் குமார்: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் மங்காத்தா. இதில் அஜித் உடன்  த்ரிஷா, அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.அதிலும் இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணம் விஷயத்தில் பல தில்லு முல்லு வேலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார்.

Also Read: அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்

சோனு சூட்: இயக்குனர் கொடி இராமகிருஷ்ணா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம் தான் அருந்ததி. இதில் அனுஷ்கா செட்டி, சோனு சூட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சோனு சூட் பெண்களுக்கு எதிராக பல அக்கிரமங்களையும் செய்யும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். அதிலும் அடியே அருந்ததி என இவர் மிரட்டிய வசனங்கள் இன்றளவும்  பார்ப்பவர்களை கொலை நடுங்க வைக்கும் என்றே சொல்லலாம்.

சாய்குமார்: இயக்குனர் ரமணா இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ஆதி. இதில் விஜய் உடன்  த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் சாய்குமார் அன்பாக இருந்த கூட்டு குடும்பத்தை தனது வில்லத்தனத்தால் அடியோடு அழிக்கும் கல்நெஞ்சம் கொண்ட எதிர்மறையான கேரக்டரில் நடித்திருப்பார்.

கமலஹாசன்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு கமல் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். இதில் அண்ணன் மற்றும் தம்பி என இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் தம்பி கேரக்டரில் நந்தகுமார் என்னும் சைக்கோ கொலையாளியாக தனது உடல் அமைப்பை மாற்றி மிரள விட்டிருப்பார்.

Also Read: ஜக்கம்மாவாக நடிக்க மறுத்த நடிகை.. வாய்ப்பை பயன்படுத்தி பின்னி பெடலெடுத்த அனுஷ்கா

- Advertisement -

Trending News