அட இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா? நடிப்பையும் தாண்டி எஸ்கே கொடுத்த 7 ஹிட் பாடல்கள்

சினிமா துறையில் தொகுப்பாளராக தனது திரைபயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதிலும் பல ஹிட்  படங்களை கொடுத்து வந்த இவர் தனது கடின முயற்சியின் மூலம் தற்பொழுது முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஜொலித்து வருகிறார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். அப்படியாக சிவகார்த்திகேயன் எழுதிய 7 ஹிட் பாடல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஹலமிதி ஹபிபோ: நெல்சன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய் உடன் பூஜா ஹெக்டெ ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாலே” என்னும் அரபிக் குத்துப் பாடலுக்கு தளபதி, பூஜா உடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்டிருப்பார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாகவே அமைந்திருந்தது.

Also Read: விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

மார்டன் ரதியே: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இதில் சிவகார்த்திகேயன் உடன் பிரியங்கா அருள் மோகன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “மார்டன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா” என்னும் பாடலில் சிவகார்த்திகேயனே செம்ம பர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இளசுகளை குதூகல படுத்திய பாடலாகவும் அமைந்திருந்தது. 

அவள் முகம் பார்த்து: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “அவள் முகம் பார்த்து நான் இங்கு தடுமாறினேன் நிழல் தொட வேர்த்து உயிர் கொண்டு சிலை ஆகிறேன்” என்னும் பாடலில் சிவகார்த்திகேயன் அனைவரையும் உருக வைத்திருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு காதலை உணர்த்தும் பாடலாகவே அமைந்திருந்தது.

சிலுக்கு ஜிப்பா: பாண்டிராஜ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இதில் சூர்யா உடன் பிரியங்கா அருள்மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு” என்னும் பாடலில் சூர்யா அனைவரையும் உறைய வைத்திருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எனர்ஜி கொடுக்கக்கூடிய பாடலாக அமைந்திருந்தது. 

Also Read: சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விடுதலை சூரி.. அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா?

செல்லம்மா செல்லம்மா: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன் உடன் பிரியங்கா மோகன், வினை, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கமா” என்னும் பாடலில் பெண்களை டாலாகவே நினைத்து வர்ணித்து எழுதி இருப்பார். அதிலும் இப்பாடல் ஆனது ரசிகைகளின் மனம் கவர்ந்த பாடல் ஆகவே இருந்து வருகிறது. 

காந்த கண்ணழகி: பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயன் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இமானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்”  என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலானது. 

எனக்கு இப்போ கல்யாண வயசு: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இதில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி” என்னும் பாடலில் யோகி பாபு, நயன்தாராவின் பின்னால் ஜொள்ளு விட்டு அலைந்திருப்பார். அது மட்டுமல்லாமல் இப்பாடல் இளசுகளின் கவனத்தை ஈர்த்த பாடலாகவே அமைந்திருந்தது.

Also Read: 9 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி.. சர்ப்ரைஸாக வெளிவந்த நயன்தாராவின் 75வது பட அறிவிப்பு

- Advertisement -spot_img

Trending News