CSK vs GT இறுதிப்போட்டி நடக்க வாய்ப்பு இருக்கா? அதிரடியாய் வெளிவந்த வெற்றி கணிப்பு

அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடக்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கும் மற்றும் குஜராத் அணிக்கும் இருந்த இறுதி கட்ட போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்டது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக அகமதாபாத்தில் வானிலை மேகமூட்டமாக இருந்தது. இருப்பினும் ஒரு நம்பிக்கையால் நேத்து நடக்க இருந்த விளையாட்டை பார்ப்பதற்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்வையிட வந்திருந்தனர்.

Also read: 10 புகார்கள், விதிமீறலில் சிக்கிய மகேந்திர சிங் தோனி.. அடுத்த லெவலுக்கு சிஎஸ்கே போகுமா.?

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத வகையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரெண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகும் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால், அத்துடன் மேகங்கள் திரண்டு இருந்ததால் நேற்று நடக்க இருந்த மேட்சை இன்று நடப்பதற்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

இன்று எவ்வித குறையும் இல்லாமல் போட்டி நடத்தப்படும் என ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள். இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றிலேயே இப்பொழுதுதான் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று பைனல் மேட்ச் நடக்கும் குஜராத் அகமதாபாத்தில் இன்று மாலை மழை பெய்தாலும், இரவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால் இன்று CSK மற்றும் GT இடையில் மேட்ச் நடப்பது உறுதியாகியுள்ளது. மேலும் CSK வெறித்தனமான ரசிகர்கள் இறுதி கட்டத்தை நோக்கி ஆரவாரமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு பயத்தையும் உருவாக்கி இருக்கிறது.

Also read: முதல் 6 ஓவர்களில் அதை உணர்ந்த தோணி.. CSK தோற்க்க காரணம் இதுதான்

ஏனென்றால் அவர்கள் எங்கெல்லாமோ இருந்து மேட்ச் பார்ப்பதற்கு ஏற்கனவே டிக்கெட்டை முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இப்படி இழுத்தடித்து விட்டதால் இன்று சரியான முறையில் மேட்ச் நடக்கப்படுமா என்று ஒரு குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் வானிலை அறிக்கை அறிவிப்பின்படி இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியதால் மேட்ச் நடக்க இருக்கிறது. சரி இப்பொழுது வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று பார்க்கலாம்,

ஒரு காலத்தில் கடப்பாரை பேட்டிங் லைன் அப் என்றால் அது மும்பை அணி மட்டுமே, ஆனால் இப்பொழுது அந்த இடத்தை சென்னை தக்க வைத்து வருகிறது. எட்டாவது, ஒன்பதாவது இடத்தில் இறங்கும் தீபக்சகர் கூட பேட்டிங் செய்து வருகிறார் அதனால் சென்னை அணிக்கு பேட்டிங் பலமே. பந்துவீச்சு முதலில் மோசமாக இருந்தாலும் இப்பொழுது சற்று வலுபெற்று உள்ளது.

குஜராத் அணியை பொறுத்தவரை சுபம் கில், ஹர்திக் பாண்டியா, மில்லர் இவர்கள் மூவரும் தான் சற்று வலுவாக உள்ளனர் அதிலும் கில் வாழ்நாள் பார்மில் இருக்கிறார். சென்னை அணிக்கு ஹர்திக் பாண்டியா மில்லர் பிரச்சனை இல்லை. அவர்கள் சுபம் கில்லை சமாளித்து விட்டால் போதும். மொத்தத்தில் பார்த்தால் சென்னை அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது

Also read: ஒரே ஒரு ஹிட் படத்திற்காக போராடும் 6 நண்பர்கள்.. கண்டுக்காமல் கழட்டிவிட்ட ஜெய்யின் குரு

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்