வாரிசு நடிகருடன் தொடர்பில் அனுஷ்கா? விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சாம்

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவரை அரேபியன் குதிரை என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவார்கள். பார்த்த உடனே பற்றிக்கொள்ளும் தோற்றத்தில் இருக்கும் அனுஷ்காவே யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்டவர் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பது சோகமான விஷயம்தான்.

கவர்ச்சி நடிகையாக கலக்கி கொண்டிருந்த காலகட்டங்களில் அருந்ததி போன்ற சோலோ ஹீரோயின்கள் படத்தில் நடித்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வெற்றி நடை போட்டு வந்தார். அப்படி ஒரு முயற்சியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தபோது ஹீரோக்களுக்கு இணையாக உடம்பை ஏற்றி இறக்கி ஆசைப்பட்ட அனுஷ்காவால் உடலை ஏற்ற மட்டும்தான் முடிந்ததே தவிர குறைக்க முடியவில்லை.

இதனால் அவரது திருமணமும் தள்ளி சென்று கொண்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் கவலையில் மூழ்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா நாகர்ஜுனா பையன் நாக சைதன்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சமந்தாவுடன் விவாகரத்து நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் நாகார்ஜுனாவுக்கு தெரியவர உடனடியாக அனுஷ்கா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரையும் கான்ஃபரன்ஸ் காலில் போட்டு இந்த செய்தி பற்றி நீண்ட நேரம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்களாம். இதுபோலத்தான் சில மாதங்களுக்கு முன்பு அனுஷ்காவுக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று.

அனுஷ்கா தரப்போ இப்போதைக்கு கல்யாணம் செய்யும் ஐடியாவே இல்லை எனவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க போவதுதான் அனுஷ்காவின் அடுத்த இலக்கு எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி இந்த செய்தி மெல்லுவதற்கு இதமாக இருக்கிறதாம் அக்கட தேசத்துக்கு.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை