சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை மிஸ் செய்த அனுஷ்கா.. ஆர்யா படத்தால் வந்த கெட்ட நேரம்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா கடைசியாக மாதவனுடன் நிசப்தம் என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு அனுஷ்காவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் வெளியாகவில்லை.

2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சூப்பர் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சுவீட்டி ஷெட்டி என்னும் அனுஷ்கா ஷெட்டி. இவர் தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர். அனுஷ்காவுக்கு சினிமா உலகில் நல்ல அடையாளத்தை கொடுத்தது அருந்ததி படம் தான். கொடி இராமக்கிருஷ்ணாஇயக்கத்தில் இந்த படம் தமிழ் தெலுங்கு என ரெண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: 8 வயது கம்மியான ஹீரோவுடன் ஜோடி போடும் அனுஷ்கா.. தேவசேனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா!

சில வருடங்களுக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த அனுஷ்கா, அவர் யோசிக்காமல் எடுத்த முடிவினால் இப்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார். இப்போது அருந்ததி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் மீண்டும் அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழு யோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு காரணம் அவருடைய அதிக உடல் எடை தான். அனுஷ்கா கடந்த 2015 ஆம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவானது. தெலுங்கில் ‘சைஸ் ஸீரோ’ என்னும் பெயரில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்காக தான் அனுஷ்கா தன்னுடைய எடையை பல மடங்கு ஏற்றினார். இந்த படம் தான் அவருடைய சினிமா கேரியரையும் முடித்து வைத்தது என்றே சொல்லலாம்.

Also Read: ஜோதிகா வாய்ப்பை தட்டிப்பறித்த அனுஷ்கா.. இதெல்லாம் அந்தம்மாக்கு முன்னாடியே நான் செஞ்சிட்டேன்

உடல் எடையை குறைக்க தவறான வழிகளை தேடி சென்று ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதை விட, குண்டாக ஆரோக்கியமாக இருப்பது நல்லது என்ற கருத்தை வலியுறுத்தி வெளிவந்த படம். இந்த படத்திற்காக அனுஷ்கா போட்ட முயற்சி கூட படக்குழு போடாததால் திரைக்கதை சொதப்பி படம் பிளாப் ஆனது.

இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவால் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை. பாகுபலி இரண்டாம் பாகத்திலேயே பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தான் அவர் எடையை கொஞ்சம் கம்மியாக காட்டி இருந்தார்கள். இந்நிலையில் உடல் எடை காரணமாக அனுஷ்கா அருந்ததி இரண்டாம் பாகத்தின் வாய்ப்பை மிஸ் செய்து இருக்கிறார்.

Also Read: அனுஷ்கா மீது தீரா ஆசையில் 2 தமிழ் நடிகர்கள்.. ஜோடி சேர்க்கச் சொல்லி அடம் பிடிக்கிறார்களாம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்