போலீஸ் வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட அனுஷ்கா.. பதட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை திடீரென போலீசார் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிறகு விஷயம் தெரிந்துதான் உயிரே வந்ததாம்.

கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ள நடிகைகளில் முக்கியமானவர் அனுஷ்கா. ஆரடி ஆப்பிள் என ரசிகர்கள் அவருக்கு செல்லப் பெயர் வைத்துள்ளனர். தமிழ் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார்.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகமதி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் அனுஷ்கா உடல் எடை கூடி இருப்பதால் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

ஆண் நடிகர்களை போலவே பெண் நடிகைகளும் உடல் எடையை ஏற்றி இறக்கி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டார் அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டு பின்னர் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் திடீரென அனுஷ்கா போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததாம். பிறகுதான் தெரிந்தது போலீசார் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றுக்கு தலைமை தாங்க அனுஷ்காவை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றார்களாம்.

anushka-latest-photo
anushka-latest-photo

அதுவும் அனுஷ்கா விருப்பப்பட்டுதான் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா, என்னதான் நாங்கள் சினிமா நட்சத்திரமாக இருந்தாலும் வெயிலிலும் மழையிலும் எங்களுக்காக போராடும் நீங்கள்தான் உண்மையான நட்சத்திரங்கள் என போலீசாரை பாராட்டி பேசியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்