அடிமேல் அடி வாங்கும் அனுஷ்கா.. அறைக் கதவை சாத்தி கதறி அழும் சோகம்

உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அனுஷ்காவுக்கு தான் செல்ல வேண்டியது. ஆனால் அவரது கேரியரில் கொஞ்சம் அப்படி இப்படி சறுக்கல் ஏற்பட்டதால் அது நயன்தாரா பக்கம் வந்தது.

தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் முக்கியமானவர் அனுஷ்கா. கமர்ஷியல் படங்களிலும் சரி, கதையின் நாயகியாகவும் சரி, அவருக்கு நிகர் அவர்தான். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை கூட்டி பின்னர் குறைக்க முடியாமல் பல வருடங்களாக கஷ்டப்பட்டு வரும் அனுஷ்காவுக்கு அதன் காரணமாகவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டன.

தற்போது ஓரளவு உடலை குறைத்தாலும் பழைய நிலைமைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வயதும் ஏறிக்கொண்டே செல்கிறது. இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் தன்னைவிட வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் நடிக்கும் பட வாய்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் சர்ச்சையான கதையாக இருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக தனக்கு செம ரீ என்ட்ரியாக இருக்கும் என பெரிய நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் தற்போது அந்த படம் உருவாகுமா? என்பதே சந்தேகம்தான். இதனால் கிடைத்த ஒரு பட வாய்ப்பு போய்விட்டதே என தனது அறைக்குள் கதவை சாத்தி கதறி அழுது கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா.

anushka-cinemapettai
anushka-cinemapettai
- Advertisement -