காதல் தோல்வியை ஒப்புக்கொண்ட பிரேமம் பட அனுபமா.. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரராக இருக்குமோ.!

மக்களுக்கு பிரபலமான துறையில் இருக்கும் பிரபலங்களைப் பற்றிய வதந்திகள் பரவுவது வழக்கமான ஒன்று தான். அதுவும் திரைத்துறையில் அதிவேகமாக பல வதந்திகள் பரவி விடுவதும் உண்டு. சில சமயத்தில் அந்த வதந்திகள் கூட உண்மையாக மாறிவிடக்கூடும்.

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமானவர் அனுபமா. இவர் தமிழ் சினிமாவில் கொடி திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் .

பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில் நீங்கள் காதலித்து உள்ளார்களா ? என்ற கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

anupama-parameshwaran-cinemapettai-01
anupama-parameshwaran-cinemapettai-01

நான் உண்மையாக ஒருவரை காதலித்தேன், ஆனால் தற்போது அந்த காதல் பிரேக் அப் ஆகி விட்டது என்று தனது இன்ஸ்டாவில் மனம் திறந்திருக்கிறார். நான் உருகி உருகி ஒருவரை காதலித்தேன் ஆனால் காதல் கைகூடாமல் பாதியிலேயே முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு அனுபமாவிற்கும் கிரிக்கெட் வீரர் வேகப்பந்து வீச்சாளரான பும்ர விற்கும் காதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அதை அனுபமா மறுத்து விட்டார். நானும் பும்ராவும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார்.

இருப்பினும் இப்போது தான் காதலித்தவரை பற்றி அவர் ஏதும் விவரம் கூறவில்லை. காதல் முடிந்துவிட்டதாக மட்டும் கூறியிருக்கிறார். அந்த காதல் பும்ரா தானா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இருப்பினும் அதை பற்றிய செய்திகள் விரைவில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.