வில்லியாக மிரட்டிய 5 நடிகைகள்.. முதல் இடத்தைப் பிடித்த நீலாம்பரி

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனென்றால் அதன் மூலம் அவர்களது மார்க்கெட் குறைந்துவிடும் என்ற பயம் இருக்கும். ஆனால் சில முன்னணி நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த துணைக் கதாபாத்திரங்களில் வில்லியாக நடித்துள்ளார்கள்.

ரம்யா கிருஷ்ணன் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தார்கள். படையப்பா படத்தின் நாயகியாக நடித்த சௌந்தர்யாவை விட வலுவான கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மிரட்டலான நடிப்பில் மூலம் நீலாம்பரியாக மக்களின் மனதில் இடம் பிடித்தார் ரம்யாகிருஷ்ணன்.

ரீமா சென் : சிலம்பரசன், நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லவன். இப்படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தாலும் சிம்புவின் பள்ளிப்பருவம் காதலியாக கீதா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரிமாசென் அசத்தியிருந்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ரீமா சென் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரேயா ரெட்டி : விஷால், ரீமா சென் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. இப்படத்தில் மாஸான வில்லி கதாபாத்திரத்தில் ஈஸ்வரியாக நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. இப்படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சிம்ரன் : பிரசாந்த், லைலா, சிம்ரன் வெளியான திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன். சரண் இயக்கத்தில் வெளியான இப்படம் சிம்ரனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்ரன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் கதாநாயகியாக இடம்பிடித்தார்.

ஜோதிகா : கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம். இப்படத்தில் சரத்குமார், ஜோதிகா ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கீதா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து இருந்தார். ஜோதிகாவின் திருமணத்திற்குப் பிறகு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை