புதன்கிழமை, நவம்பர் 13, 2024

தேவையில்லாம சவுண்ட் விடும் அர்னவ் டோலி.. உச்சகட்டத்துக்கு சென்ற கேரளத்து சேச்சி

பிக் பாஸ் சீசன் 8ன் முதல் வாரத்தின் இறுதிநாளன்று விஜய் சேதுபதி மாஸ் என்ட்ரி கொடுத்து அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார். இந்த நிலையில் ரவீந்தர் எலிமினேட் ஆனார். எலிமினேட் ஆன கையோடு, ஒவ்வொரு போட்டியாளர்களின் ஆட்டத்தையும் ரிவியூ செய்தார்.

அதில் குறிப்பாக அர்னவ் அன்ஷிதா இருவருமே பக்கா Fake என்று சொன்னார். மேலும் அன்ஷிதா ஆட்டத்தை ஆடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்க பட்டது.
வாரத்தின் முதல் நாளான நேற்று வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மத்தியில் 2வது வார நாமினேஷன் நடைபெற்றது.

இந்த முறை, நாமினேஷனில் ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் பிக் பாஸ், அதாவது ஆண்கள் பெண்கள் என பிறக்கப்பட்டுள்ள அவேட்டில் ஆண்களை பெண்கள் நாமினேட் செய்ய வேண்டும் என்றும், பெண்களை ஆண்கள் நாமினேட் செய்யவேண்டும் என்பதுதான் அந்த ட்விஸ்ட். அப்படி இந்த நாமினேஷனில் பெண்களால் ரஞ்சித், ஜெப்ரியும் ஆண்களால் சாச்சனா, சௌந்தர்யா ஆகியோர் முதல் ப்ரோமோவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

சவுண்ட் சரோஜாவாக மாறும் அர்னவ் டோலி

அதனால் இன்று நானும் விளையாடுகிறேன் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில், தேவை இல்லாமல் சவுண்ட் விட்டு கொண்டிருக்கிறார். இத்தனை நாள் அமைதியாக வளம் வந்த அன்ஷிதா இன்று முதுகுமரணை வெளுத்து வாங்கி ஒட்டுமொத்த வீடே மிரளும் வகையில் கோவத்தின் உச்சிக்கே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

முத்துக்குமரன் எதோ பேச, அதற்க்கு, “இஷ்டமல்லா” என்று கத்திகொண்டே போகிறார். பேச்சை ஆரம்பித்தது என்னவோ ஆஷிதா தான். அவரே ஆரம்பித்துவிட்டு, அவரே கத்திவிட்டு, அவரே எனக்கு பேச விருப்பமில்லை என்று செல்கிறார். ஒருபக்கம், அப்படி என்ன முத்துக்குமரன் செய்தார் என்ற கேள்வி வருகிறது.

அதே நேரத்தில், எதற்கு இவர் இப்படி சவுண்ட் விடுகிறார். நானும் இருக்கிறேன் என்று காமிக்கவா? ஆகமொத்தத்தில், இது நாள் வரை அமைதியாக இருந்தது, நாடகமா, அல்லது இப்போது போடுவது நாடகமா என்று தான் புரியவில்லை.

- Advertisement -spot_img

Trending News