விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் இன்னொரு ஹீரோ.. சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு பில்டப்!

விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது எளிதான காரியம் ஆகிவிட்டது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் சினிமாவில் விரைவில் ஹீரோவாக உள்ளாராம்.

விஜய் டிவியை என்னதான் கிண்டல் செய்தாலும் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் பல பிரபலங்களும் சாதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு சொல்லலாம்.

ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக வந்து சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். முன்னணி நடிகர்களுக்கு பிறகு அதிக மார்க்கெட் உள்ள நடிகராகவும் வலம் வருகிறார்.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து மா கா பா ஆனந்த் என்பவரும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மாகாபா சினிமாவுக்கு வந்த புதிதில் அடுத்த சிவகார்த்திகேயன் என உசுப்பேற்றிவிட்டு அவரது சோலியை முடித்தனர்.

தற்போது அதே போல் இன்னொருவருக்கும் பில்டப் கொடுத்து வருகின்றனர். அவர் வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சித்தார்த் என்பவர் தான்.

sidhdharth-kumaran-cinemapetai
sidhdharth-kumaran-cinemapetai

இவர் நீண்ட காலமாக சின்னத்திரையில் ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் விரைவில் வெள்ளித்திரையிலும் ஹீரோவாக களம் இறங்க உள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்