ராதிகாவையும் தாண்டி விஜயகாந்தை ஈர்த்த மற்றொரு நடிகை.. 3 படங்களில் கேப்டன் உடன் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி

Vijayakanth: தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள். அது போல தான் விஜயகாந்த் ராதிகாவும் சேர முடியாமல் போய்விட்டார்கள். பொதுவாக சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்ததும் அவர்களுடைய கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகிவிடும். அத்துடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதல் வயப்படுவதும் இயல்பு தான்.

அப்படித்தான் விஜயகாந்த் மனதை ராதிகா கவர்ந்தார். ஆனால் கடைசியில் இவர்கள் ஒன்று சேர முடியாமல் போய்விட்டது. அடுத்ததாக ராதிகாவையும் தாண்டி மற்றொரு நடிகையும் விஜயகாந்த் உடன் ஜோடி சேர்ந்து 3 படங்களில் நடித்து கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகை பானுப்ரியா. அந்த வகையில் விஜயகாந்த் மற்றும் பானுப்ரியா சேர்ந்து நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

பரதன்: சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு விஜயகாந்த், பானுப்ரியா, எஸ்பிபி பாலசுப்ரமணியன் நடிப்பில் பரதன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், அறம் சீற்றம் கொண்டு அநியாயங்களுக்காக பொங்கியிலும் ஒரு கேப்டனாக ஆக்ஷன் காட்சியில் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இப்படத்தில் பானுப்பிரியாவும் விஜயகாந்த்தும் ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள். பிறகு சூழ்நிலை காரணமாக விஜயகாந்த் ஜெயிலுக்கு போகுமாறு நிலைமை வந்து விடும்.

Also read: விஜயகாந்த் வீட்டில் ஏற்பட்ட குழப்பம்.. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து

காவியத்தலைவன்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு காவியத்தலைவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், பானுப்பிரியா, எம்என் நம்பியார், மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பானுப்பிரியா இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். ஒன்னு பணக்கார பெண்ணாக திமிர் பிடித்து சொத்துக்காக விஜயகாந்தை கல்யாணம் பண்ணி இருப்பார். இன்னொன்று பாசத்துக்கும் குடும்பத்துக்கும் ஏங்கி இருக்கும் சாரதா கேரக்டரில் நடித்திருப்பார். இதில் விஜயகாந்த் என்னதான் இருந்தாலும் என் மனைவி பிரியாவிற்கு தான் என்னுடைய முழு காதலும் இருக்கும் என்று கடைசி வரை நின்று பாசத்தை காட்டுவார்.

சத்ரியன்: கே சுபாஷ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு சத்ரியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், பானுப்பிரியா, திலகன், விகே ராமசாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பார்க்கும் பொழுது விஜயகாந்த்-க்கு மட்டும் தான் அந்த போலீஸ்கான மிடுக்கு, கம்பீரம், ஸ்டைல் எல்லாமே கச்சிதமாக பொருந்துமாறு இருக்கும். கேப்டனின் ஆக்ஷன்க்கு நிகர் அவர் மட்டுமே என்பதற்கு ஏற்ப எதார்த்தமான நடிப்பும் இருக்கும். சத்திரனுக்கு சாவே கிடையாது என்று சொன்னதற்கு ஏற்ப என்றுமே தமிழக மக்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி பானுப்பிரியாவுடன் சேர்ந்து நடித்த இந்த மூன்று படங்களிலுமே விஜயகாந்த் உடன் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அந்த காலத்தில் விஜயகாந்த்துடன் நடித்த நடிகர்கள் அனைவருக்குமே அவர் மீது மிகப்பெரிய பிரியம் உண்டு. அதனால் தான் விஜயகாந்த் வைத்து ஒரு படத்தை தயாரிக்க பானுப்பிரியா முன்வந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளிவராமல் போய்விட்டது.

Also read: விஜயகாந்த்காக கூட வரல, உயிர் நண்பன் வெற்றிக்காக ஓடோடி வந்த அஜித்.. காட்டு தீயாக பரவும் ஃபோட்டோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்