அண்ணாத்த பாதி இப்படி, மீதி அப்படி.. சூப்பர் ஹிட் படங்களுடன் ஒப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

தர்பார் படத்தின் சலசலப்புகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. படம் தொடங்கப்பட்ட வேகத்தில் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.

ஆனால் இடையில் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் படத்தின் நிலை என்ன ஆகும் என்றே தெரியாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது ரஜினி முழு உடல் ஆரோக்கியத்துடன் நடித்து வருகிறார். மேலும் தற்போது அண்ணாத்த படத்திற்காக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் செட் போட்டு விறுவிறுப்பாக சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்களில் அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படம் வருகின்ற 2021 தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது ஒருபுறமிருக்க அண்ணாத்த படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிவரும் திலிப் சுப்புராயன் அண்ணாத்த படத்தை பற்றி கூறி ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் பாதி பழைய சூப்பர் ஹிட் படமான படையப்பா போன்றும், இரண்டாம் பாதி பாட்ஷா போன்றும் பட்டையை கிளப்பப் போகிறது என கூறியுள்ளார். மேலும் ரஜினியின் சினிமா கேரியரில் அண்ணாத்த படம் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

annatthe-cinemapettai
annatthe-cinemapettai
- Advertisement -