டாப் 10-ல் மூன்று இடங்களை பிடித்த அண்ணாத்த.. ரஜினிக்கு நிகர் ரஜினியே

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறந்த குடும்ப திரைபடமான இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் தங்கச்சியாக நடித்து அசத்தியுள்ளார். தற்போது எந்த சேனலை பார்த்தாலும் அந்த திரைப்படத்தில் வரும் ‘தங்கம் தங்கம்’ என்ற தங்கச்சி பாடல் தான் ஒலிக்கிறது. அந்த அளவுக்கு இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்பு பெற்ற அண்ணாத்த திரைப்படம் தற்போது இந்திய அளவில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று வாரங்களுக்கு பிறகு நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் அண்ணாத்த திரைப் படத்தின் தமிழ் பதிப்பு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் தெலுங்கு பதிப்பு ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்த பட்டியலில் அண்ணாத்த திரைப்படம் பாலிவுட் படங்களை எல்லாம் ஓரம் கட்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஏற்கனவே அண்ணாத்த திரைப்படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை வாரி குவித்து வருகிறது. தற்போது இந்த சாதனையின் மூலம் பல சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த செய்தி அண்ணாத்த படக்குழு மற்றும் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை