அண்ணாத்த 150 கோடி வசூலா.? பரபரப்பாக வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்த. இதில் நடிகர் ரஜினிகாந்த் நாம் இதுவரை பார்க்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் அண்ணன், தங்கை சென்டிமென்ட்டில் நடித்துள்ளார். அதனால் படத்திற்கு ரஜினி ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ரஜினிகாந்த் படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி அன்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியாகி சில நாட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பின்னர் வந்த தொடர் மழை காரணமாக இப்படத்திற்கு கூட்டம் குறைந்தது.

அதன் காரணமாக இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த திரைப்படம் இதுவரை 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது இது உண்மை இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் முதல் வாரம் மட்டும் 73 கோடி ரூபாய் வசூல் செய்த அண்ணாத்த திரைப்படம் இரண்டாவது வாரத்தில் சற்று மந்தமாக இருந்தது. மேலும் இரண்டாவது வாரத்தில் 15 கோடி மட்டுமே வசூல் செய்தது.

மூன்றாவது வாரத்தில் இன்னும் குறைந்து 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால் தமிழகத்தில் படத்தின் மொத்த வசூல் 94 கோடி மட்டுமே கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரியும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்