புதுசாக அவதாரம் எடுத்த அண்ணாமலை.. இன்னும் என்னென்ன கொடுமைய பார்க்கணுமோ

கரூர் மாவட்டம் சொக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார் அண்ணாமலை பொறியியல் படிப்பை முடித்துவிட்ட லக்னோவில் ஐஐஎம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்றார்.

ஒரு உயரிய பதவியில் இருக்கும்போது அதை ராஜினாமா செய்துவிட்ட தனது சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்யப் போவதாக அறிவித்தார். இதனால் பலரது கவனத்தையும் பெற்றார். அதன்பிறகு 2020இல் பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்த 2021 இல் தமிழ்நாட்டு பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் சினிமாவில் உள்ள பிரபலங்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அண்ணாமலை அரசியலில் இருந்து தற்போது கன்னட படம் ஒன்றில் நடித்துள்ளார். இரண்டு கைகளையும் அந்த நீச்சலில் சர்வதேச அளவில் சாதனை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். அரபி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஸ்வாசின் நீச்சல் பயிற்றுவிப்பாளராக அண்ணாமலை நடித்துள்ளார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனைவராலும் அறியப்பட்ட ஒருவரை நியமிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அப்போதுதான் அண்ணாமலையை படக்குழு அணுகியுள்ளது. அவருக்கு கதை பிடித்துப்போக உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஆனால் அரபி படத்திற்கும் 1 ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்தாராம். தற்போது அண்ணாமலை நடித்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கான டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. அண்ணாமலை நடித்த இந்த முதல் படத்திற்காக பாஜக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். விரைவில் இந்த கன்னடப் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்