அனபெல் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம்.. வெறுத்துப் போய் கழுவி ஊத்திய நெட்டிசன்கள்.!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டாப்ஸீ, ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆகியுள்ள படம் அனபெல் சேதுபதி. சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்களின் தரப்பிலிருந்து தரப்பட்டுள்ளது.

சிலர், இந்த படத்தை காமெடி நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்றும் டாப்ஸி நடிப்பையும் புகழ்ந்துள்ளனர். அத்துடன் யோகி பாபு படத்திற்கு சப்போர்ட்டாக நடித்துள்ளார் அத்துடன் இந்த படம் குழந்தைகளுக்கும் பிடித்த படமாக இருப்பதாக அனபெல் சேதுபதி பற்றி நல்ல விதத்தில் கமெண்ட் அடித்துள்ளனர்.

annabelle-vijaysethupathi-1
annabelle-vijaysethupathi-1

அதேபோல சில நெகட்டிவ் கமெண்டுகளும் வந்துள்ளது. காமெடின்னு சொல்லி எடுத்தீங்க. ஆனால் காமெடியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. எந்த தைரியத்துல பார்ட் 2 எடுக்கப் போறீங்கலோ! என்று நெட்டிசன்கள் அனபெல் சேதுபதி படத்தை விளாசியுள்ளனர்.

அத்துடன், இந்த படத்தின் முதல் பாதி ஓகேவாக உள்ளது. ஆனால் 2ம் பாதி படுமோசம் மொத்தத்தில் படம் ஆவ்ரேஜ் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

annabelle-vijaysethupathi-2
annabelle-vijaysethupathi-2

மேலும், அதிக படம் நடிப்பதற்காக மொக்க படமா நடிக்கிறீர்களா? இதுவரை 50 படத்திற்கு மேல நடித்திருக்கும் உங்களது படத்தில் ஒரு படமாவது நல்லா இருக்கா, ஒரு படம் கூட உருப்படியான படம் இல்லை. இந்த லட்சணத்தில் இரண்டாம் பாகம் கேட்குதா? என்று விஜய் சேதுபதியை விமர்சித்துள்ளனர்.

annabelle-vijaysethupathi-3
annabelle-vijaysethupathi-3

அதுமட்டுமின்றி இந்த படத்தில் காண்பிக்கப்பட்ட அரண்மனையில் கேபிள் வயர் ஏசி அவுட்டோர் எல்லாம் இருந்தது. ‘1948 இல் ஏசி அவுட்டோர், கேபிள் வயர் எல்லாம் வச்சு அரண்மனை கட்டிய வீரய்யா’ என்று நெட்டிசன்கள் அனபெல் சேதுபதி படத்தை நக்கல் அடிக்கின்றனர்.

annabelle-vijaysethupathi
annabelle-vijaysethupathi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்