ரஜினிகாந்துக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் சரிவர நடைபெறாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் தற்போது ரஜினி முழு உடல் தகுதியுடன் முழுமூச்சாக அந்தப் படத்தை முடித்துக் கொடுக்க உள்ளாராம்.
இதற்காக தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் இப்படி ஒரு படம் இரவு பகலாக நடந்ததே இல்லை எனும் அளவுக்கு படக்குழுவினர் சாட்டை போல் சுழன்று வேலை பார்த்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் படக்குழுவினருக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடவோ, அவரது பக்கம் செல்லவோ கூடாது என கூறியுள்ளனராம்.
படப்பிடிப்பில் ரஜினி முற்றிலும் தனிமையில்தான் இருப்பாராம். அவரது காட்சி வரும்போது மட்டும் நடித்து கொடுத்துவிட்டு முடிந்தவரை யாரையும் தொடாமல் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து கொள்வாராம். ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் கவனிக்க சில பல பணியாளர்களை வைத்துள்ளதாம் படக்குழு.
அதேபோல் ரஜினியின் உணவுகளிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. காலை, இரவு என இரண்டு நேரமும் ரஜினிக்கு இட்லி மட்டுமே கொடுக்கப்படுகிறது. இடையில் அவித்த காய்கறிகள், சூப் ஆகியவற்றைக் கொடுத்து வருகிறார்களாம். மதியம் ரஜினிக்காக மட்டும் பிரத்தியேகமாக சத்தான அரிசியை வாங்கி சமையல் நடைபெறுகிறது.
அது மட்டுமல்லாமல் தன்னால் ரஜினிக்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என பெற்றோர் குழந்தையை போல் பாராட்டி சீராட்டி தாலாட்டி பாதுகாத்து வருகிறாராம் சிறுத்தை சிவா. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.