அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவித்த சன் பிக்சர்ஸ்.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் தலைவர் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் விரைவில் அண்ணாத்த படத்தை முடித்துவிடலாம் என ரஜினி சென்ற நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு கைவிடப்பட்டது. மேலும் ரஜினிக்கும் ரத்தக்கொதிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினர் அனைவரும் திரும்பி விட்டனர். மேலும் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்பதே தற்போது வரை முடிவு செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது.

இதற்கிடையில் சிறுத்தை சிவா அடுத்த படத்திற்கும் செல்ல முடியாமல், அண்ணாத்த படத்தையும் முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறி வருகிறாராம். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகளுக்கான தேதியை முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

ஜூன் மாதத்தில் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். அதன்பிறகு விரைவில் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு நவம்பர் 4 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக அண்ணாத்த படம் வெளியாக உள்ளதாம்.

annaththe-diwali2021-release
annaatthe-diwali2021-release

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் சுறுசுறுப்பாக தன்னுடைய அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள போவதாக படக்குழுவினர் கிரீன் சிக்னல் கொடுத்தால் தற்போது ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்