அண்ணாத்த படத்தில் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்.. அனல் பறக்கும் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தானே சிவாவை அழைத்து இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்புகளுக்கு ஏகப்பட்ட இடையூறுகள் வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அண்ணாத்த படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் பழையபடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவதால் இப்போதே அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விடலாம் என படக்குழுவினருக்கு தூது விட்டுள்ளார்.

இதைப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் உடனடியாக அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளுக்காக ஒரு தனி ஸ்டூடியோ ஒன்றை ஏற்பாடு செய்து ரஜினிக்கு கொடுத்துள்ளது. விரைவில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட ஆர்வமாக இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே தேதியில் பல முன்னணி நடிகரின் படங்கள் வெளியாகவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

ரஜினி அண்ணாத்த படத்தில் டான் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர். ரஜினியின் சினிமா கேரியரில் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் எனவும் தெரிகிறது.

annatthe-deepavali-cinemapettai
annatthe-deepavali-cinemapettai
- Advertisement -