மாநாடு படம் அண்ணாத்த படத்துடன் மோதுவதற்கு காரணம் இதுதான்.. பலே கில்லாடி தான் போங்க

சமீபகாலமா ரஜினிகாந்த் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளன இத்திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட்டு வசூலை வாரி குவிப்பதற்கு திட்டமிட்டிருந்தனர்.

கடைசியாக வெளியான ரஜினியின் பேட்ட படம், அஜித் நடித்த விஸ்வாசம் படம் பொங்கலன்று வெளிவந்து இரண்டுமே மரண ஹிட்டடித்தது.  இதனை தொடர்ந்து அண்ணாத்த படம் வெளியாகும் அன்று சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படமும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தனர். இதனால் எதற்காக மாநாடு படம் அண்ணாத்த படத்துடன் மோதுகிறது என்ற சந்தேகம் சினிமா வட்டாரத்தில் இருந்தது.

ஒருபக்கம் தீபாவளி அன்று படத்தை வெளியிட்டால் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட ஓரளவிற்கு வசூல் பெற்றுவிடலாம் என்பதற்காகத்தான் அண்ணாத்த மற்றும் மாநாடு 2 படங்களையும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறிவந்தனர்.

maanadu
maanadu

ஆனால் அது உண்மையில்லை அண்ணாத்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆளுங்கட்சிக்கு தற்போது நெருக்கமான நிறுவனம் என்பதால் அண்ணாத்த படம் தீபாவளியன்று 50% இருக்கைகள் நீக்கிவிட்டு 100% இருக்கைகளும் அனுமதிக்கலாம் என கூறி வருகின்றனர்.

இதனால்தான் சிம்பு அண்ணாத்த படத்துடன் மாநாடு படமும் வெளியிட்டால் 100% இருகைகளுடன் படம் வெளியாகி வசூல் பெற்றுவிடும் என்பதற்காகத்தான் அண்ணாத்த படத்துடன் மாநாடு படம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

- Advertisement -