அண்ணாத்த படத்தில் கலக்கிய அஜித்.. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அதிர வைத்த தல ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் என்னதான் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் தமிழகத்தில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நெகட்டிவ் கமெண்ட்கள் எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்பது நிரூபனமாகி உள்ளது.

அந்த வகையில் அண்ணாத்த படம் எப்படி இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி கொண்டு தான் இருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல அஜித் ரசிகர்களும் இப்போ அண்ணாத்த படத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். அதுக்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கு.

அதாவது பொதுவா தியேட்டர்ல படம் ஓடும்போது படத்திற்கு இடைவேளை அளிப்பது வழக்கம் தான். அப்படி இடைவேளை அளிக்கும் சமயத்தில் ரசிகர்கள் பொழுதுபோக்கும் விதமாக வெளிவர உள்ள புதிய படங்களின் டீசர் அல்லது டிரைலர் திரையிடப்படும். அந்த வகையில் அண்ணாத்த படத்தின் இடைவேளையின் போது அஜித்தின் வலிமை பட டீசர் திரையிடப்பட்டுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தியேட்டரில் திரையிடப்பட்டதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் விசில் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

valimai-cinemapettai
valimai-cinemapettai

அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் பாடல் ஒன்றில் தியேட்டருல எந்த படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்க தான் என்ற வரி இடம் பெற்றிருக்கும். தற்போது அதை நிரூபிக்கும் விதமாக அண்ணாத்த படத்தின் போது அஜித்தின் வலிமை டீசர் திரையிடப்பட்டதால், அஜித் அங்கு ஹீரோவாகவே தெரிந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்