ரஜினி படத்தில் இணைந்த விஜய் பட முரட்டு வில்லன்.. அண்ணாத்த பட லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தானே வரவேற்பு உள்ளது. இவரது ஸ்டைலுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபகாலமாகவே ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலம் மற்றும் கபாலி ஆகிய படங்களில் ரஜினி நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் அபிமன்யூ சிங் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் தமிழில் தலைவா, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. எனவே இதை ஈடுகட்டும் முயற்சியில் தற்போது ரஜினி உள்ளார். அதேபோல் ரசிகர்களும் அண்ணாத்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் அபிமன்யு இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

annaatthe-singh-villain
annaatthe-singh-villain
- Advertisement -