முறுக்கு மீசை, பரட்டைத் தலை, கருப்பு தாடி.. இணையத்தை கலக்கும் தலைவரின் அண்ணாத்த கெட்டப்

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் விரைவில் அண்ணாத்த படத்தை முடித்துவிடலாம் என ரஜினி சென்ற நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு கைவிடப்பட்டது. மேலும் ரஜினிக்கும் ரத்தக்கொதிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினர் அனைவரும் திரும்பி விட்டனர். மேலும் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே தன் தயாரிக்கும் படங்களில் புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகள் ஆகியவற்றை பட ரிலீசின் போது தான் வெளியிடுவார்கள்.

ஆனால் தற்போது சற்றே தங்களுடைய மார்க்கெட்டிங் தந்திரத்தை மாற்றி முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு தளங்களிலிருந்து அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பரட்டைத் தலை, முறுக்கு மீசை, கருப்பு தாடி என பட்டையை கிளப்பி வருகிறார். கண்டிப்பாக அண்ணாத்த திரைப்படம் ரஜினிக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

annaatthe-cinemapettai
annaatthe-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்