கை குலுக்கினால் படுக்கைக்கு வான்னு அர்த்தம்.. நடிகரின் முன்னாள் காதலியை அபகரிக்க திட்டம் போட்ட தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடன் நடிக்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் என்றைக்கு நடிகைகள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என ஓபன் ஆக சொன்னார்களோ அதிலிருந்து அளவுக்கதிகமாக இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது.

சில நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக நடிகர்களுடனும் படம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரபலங்களுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் தெரிவிப்பதில்லை. ஆனால் சில நடிகைகள் ஆரம்பத்தில் அந்த மாதிரி வேலைகளை செய்துவிட்டு பின்னாளில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு அவர் அப்படிக் கூப்பிட்டார், இவர் இப்படி செய்தார் என பழி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவரின் முன்னாள் காதலி அங்கிட லோகாந்தே(ankita lokhande) என்ற நடிகை தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நீண்ட நாட்கள் கழித்து குறிப்பிட்டுள்ளார்.

ankita-lokhande-cinemapettai
ankita-lokhande-cinemapettai

36 வயதான அங்கீதாவை ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்பு கொடுப்பதாக ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த தயாரிப்பாளர் சிலபல அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கைகுலுக்கி உள்ளார்.

நடிகை சங்கீதா அட்ஜஸ்ட்மென்ட் என்றால் நடிகருடன் டின்னர், பார்ட்டிக்கு செல்ல வேண்டுமா என்று கேட்டாராம். அதற்கு தயாரிப்பாளர் கையை குலுக்கினால் படுக்கைக்கு வா என்று அர்த்தம் எனவும், அந்த நடிகருடன் சென்றுவிட்டு அடுத்த நாள் என்னிடம் வந்துவிடு எனவும் கூச்சமே இல்லாமல் கூப்பிட்டாராம்.

உடனே டென்ஷனான அந்த நடிகையை சமாளிப்பதற்காக பணம் கூட சேர்த்து கொடுக்கிறோம் என்று கூறியுள்ளார் அந்த தயாரிப்பாளர். பணத்தைக் காட்டி என்னை விலைக்கு வாங்க முடியாது என்று கூறிவிட்டு அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம் அங்கிட லோகாந்தே.

- Advertisement -